சென்னை அருகே கஞ்சா பயன்படுத்தியது குறித்து தட்டிக் கேட்டவர் வீட்டிற்குள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிய நிலையில் அதே பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த ஓட்டுனர் முருகன். இவர் வீட்டின் மாடியில் இருந்த குடிசை மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதில் குடிசை வீடு மற்றும் அதிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா அடித்தது குறித்து முருகன் நேற்று தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் முருகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இதுகுறித்து முருகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 43 gang என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவைச் சேர்ந்த அபினவ் வீட்டில் கஞ்சா செடி வளர்ந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா செடியை கைப்பற்றிய காவல்துறையினர் அபினவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.