Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்து நியமனம்..!!

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ள ஹர்ஷவர்தன் சிறிங்கலா (Harsh Vardhan Shringla) வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்துவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான சந்து, 2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான இந்திய தூதராக உள்ளார். அதற்கு முன்னர் பல ஆண்டுகள் வாஷிங்டனில் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தரண்ஜித் சிங் சந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |