நாளை முதல் சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
நாடெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் அடி எடுத்து வைக்கும் பொதுமக்களுக்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திட்டம் நாளை முதல் அமலாக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வரும் வாகனங்களின் தரத்திற்கு ஏற்றவாறு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாகவும், எந்தெந்த இடங்களில் என்றும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 20 இடங்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் ஒமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வைகுந்தம் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில், சமயபுரம், பொன்னம்பலப்பட்டி, திருப்பராய்த்துறையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும், இதனை தவிர புதூர் பாண்டியபுரம், எலியார்பதி, கொடைரோடு, வேலஞ்செட்டியூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.