Categories
அரசியல்

தமிழகத்தில் கட்டணம் உயர்வு அமல் – ஷாக் ஆகி போன சாமானியர்கள் …!!

தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுவாக தளர்வு ஒவ்வொரு கட்டமாக அறிவிக்கப்பட்டு..  இன்று முதல் நான்காம் கட்ட தளர்வு அமலாகிறது. மாநிலங்களும் இதே நடைமுறையை பின்பற்றி தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

தமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக முடங்கியிருந்த போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் ரூபாய் 5 – ரூ 15 வரை உயர்ந்துள்ளது.

72 கிலோ மீட்டர் நீளம் கொண்ட விக்ரவாண்டி சுங்கச்சாவடிக்கு ஒருமுறை கார், ஜீப், வேன் ஆகிய வாகனத்திற்கு ரூபாய் 80 இலகுரக வாகனம், இலகுரக சரக்கு வாகனம், மினி பேருந்துக்கு ரூபாய் 150 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர வாய்ப்புள்ளது.

Categories

Tech |