Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்துகொண்ட பெண் பணியாளர் …. இழப்பீடு வழங்கக்கோரி …. சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ….!!!

பணி நீக்கம்  செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட ஒப்பந்த பெண் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில்  ஆர்ப்பாட்டத்தில்நடைபெற்றது .

நாகப்பட்டினம் மாவட்டம் அவுரி திடலில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி தூய்மைப்பணி பரப்புரையாளர் எழிலரசி தலைமை தாங்கியுள்ளார் .மேலும் சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி முன்னிலை வகித்துள்ளார். இதில் மயிலாடுதுறை அருகே குற்றாலம் பேரூராட்சி பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஒப்பந்தம் தூய்மைப் பணி பரப்புரையாளர் நதியா என்ற பெண்  தற்கொலை செய்து கொண்டார் .

இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டியும்,அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் பணி நீக்கம் செய்த அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Categories

Tech |