Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சத்து உணவுகளை சாப்பிட்ட அதிகாரி” அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு…. தாசில்தாரின் ஆய்வு….!!

குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற சத்து உணவுகளை சாப்பிட்டு விட்டு அங்கன்வாடிப் பணியாளர்களை தாசில்தார் பாராட்டியுள்ளார்.

திருப்பத்தூரில் இருக்கின்ற பச்சூர்ப் பகுதியில் அமைத்திருக்கும் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த முகாமை தாசில்தார் பூங்கொடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

அதன்பின் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்து உணவுகளை சாப்பிட்டு விட்டு அங்கன்வாடி பணியாளர்களை அவர் பாராட்டியுள்ளார். இதனை அடுத்து குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் முறை மற்றும் ஆவணங்களை அவர் ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |