ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்த நபரை கைது செய்த போலீசார் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார் ரவிசந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஓம்சக்திநகர் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த முதலூர் பகுதியை சேர்ந்த கதிரேசனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் வகை மணல் அள்ளிவந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கதிரேசனை கேணிக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் லாரியில் இருந்த 5.80 டன் மணலை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து லாரின் உரிமையாளர் ராஜேஷ் என்பவரையும் தேடி வருகின்றனர்.