Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிரடிப்படை, போலீஸ்… கையில் ஆயுதம் வச்சு மிரட்டுறாங்க… உதயநிதி ட்விட் …!!

எனது பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நேற்று குத்தாலத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலினை காவல் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ‘விடியலைநோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற 100 நாள் தேர்தல் பரப்புரை பயணத்தை கடந்த 20ஆம் தேதி திருக்குவளையில் தொடங்கினார்.

மூன்றாவது நாளாக நேற்று  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலுள்ள கடைவீதியில் இன்று உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எஸ்.பி.ஸ்ரீநாதா தலைமையிலான காவல் துறையினர், உதயநிதி முறையான அனுமதியின்றி பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்ய முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் உட்பட நூற்றுக்கும் அதிகமாக திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நரசிங்கம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் மதியம் 2 மணிக்கு கைது செய்யப்பட்டு, இரவு 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் பிரச்சார பயணத்தை தடுத்து மதியம் 2மணிக்கு கைது செய்தவர்கள் இரவு 11 வரை விடவில்லை. அதிரடிப்படை-ஆயுதம் ஏந்திய போலீஸ் என மிரட்டிப்பார்த்தனர். எனினும், நம் கழகத்தினரின் கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் தற்போது விடுவித்துள்ளனர். எனது பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |