Categories
மாநில செய்திகள்

நாளை டாஸ்மாக் திறப்பு.. “எந்தெந்த வயதுக்கறாங்க எந்த நேரத்தில மது வாங்கலாம்”: காவல்துறை..!

டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி,

* காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
* மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை 40-லிருந்து 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி.
* மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி.

தமிழகத்தில் கொரோனா பரவலை காரணமாக பொதுமக்கள் கூடும் அனைத்து விஷயங்களும் முடக்கப்பட்டது. மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கடந்த 43 நாட்களாக தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுக்கடைகளை திறப்பதாக தமிழகர அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சென்னையில் மட்டும் மதுவிற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை டாஸ்மாக் திறக்கப்பட உள்ள நிலையில் திடீரென மதுபானங்களின் விலையை 20 சதவீதம் வரை உயர்த்தி அரசு அறிவித்திருந்தது.

அதில், சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டது. மேலும் நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், மதுக்கடைகளில் கூட நெரிசலை கட்டுப்படுத்த நேர கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |