Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் கடை வழக்கு –  2 மாதத்திற்கு ஒத்திவைப்பு …!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மதுபான கடைகளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு விதித்த இடைக்கால தடை உத்தரவு என்பது தற்போது நீக்கப் பட்டு இருக்கிறது. அதற்கு ஒரு இடைக்கால தடை என்பது உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாளையிலிருந்து தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறந்து கொள்ளலாம் என்பதுதான் தற்போது உறுதியாகி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தால் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால் மதுக்கடைகளை திறப்பதும், மூடுவதும் நீதிமன்றத்தில் வேலை கிடையாது . அது மாநில அரசின் வேலை என்பதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு பொதுநல வழக்கு களில் நீதிபதிகள் கூறி வந்தார்கள்.

தமிழக அரசின் இந்த வழக்கில் இது கொள்கை முடிவு சார்ந்த விஷயம், தங்கள் மாநில மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு தெரியும் நீதிமன்றங்களில் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான உத்தரவு என்பது வெளியாகி இருக்கின்றது. மேலும் இந்த வழக்கு இரண்டு மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |