Categories
மாநில செய்திகள்

பணிகள் சரியாக நடைபெறுகிறதா… சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு…!!!

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக நடைபெறுகிறதா என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. சென்னையில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகளை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி செய்திருந்தார்.

இந்நிலையில்  வியாபாரிகள் அனைவரும் பாதுகாப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி வருகிறார்களா என்பதை உயர் கோபுரங்கள் அமைத்து காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்று சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று திடீர் ஆய்வு செய்தார்.

Categories

Tech |