தமிழகத்தில் 144 தடை உத்தரவு முடியும்வரை மதுபான கடைகள் திறக்கவே கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல டாஸ்மார்க் கடை மூடப்பட்டு உள்ளதை எண்ணி சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
பலர் மதுவுக்கு பதிலாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் திரவத்தை அருந்தி சிலர் இறந்தும், சிலர் உயிருக்குப் போராடியும் வருகின்றனர். இது போன்ற செயல்கள் இனி நடக்கக் கூடாது என்பதற்காகவும், திடீரென மது அருந்துவதை நிறுத்துவதால் ஏற்படும் உடல் உபாதைகளை காரணம் காட்டியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டும் மதுபான கடைகளை திறந்து வைக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இதை ஒருபோதும் ஏற்க முடியாது அன்றாடத் தேவைகளுக்காக மக்கள் வெளியே வரும் சூழ்நிலையில் மது ஒன்றும் மனிதன் வாழ்வதற்கு அன்றாட தேவைகளில் ஒன்று கிடையாது என கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.