தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்று ஊழியர் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் பின்பற்றும்படி மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் முககவசம் அணிவதை பின்பற்றுமாறு அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்றும், மது வாங்க வருவோரை கூட்டமாக நிற்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களும் முககவசத்தை சரியான முறையில் அறிந்திருப்பதுடன் அவர்கள் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடைகளில் தினமும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றவில்லை எனில் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.