Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் ஓபன் ஏன்….? “மதுபிரியர்களுக்காக தான்” பட்டென்று உண்மையை உடைத்த அமைச்சர்….!!

மது பிரியர்களுக்காகதான் டாஸ்மாக்  கடை ஓபன் செய்யப்படுவதாக அமைச்சர்  செல்லூர் ராஜு கருத்து  தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த  நிலையில், மே 17 வரை மீண்டும் ஊரடங்கானது  மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு தளர்வுகளின்  அடிப்படையில்,

தனிக் கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கலாம்  என அரசு கூறியிருந்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடை திறக்கப்படுமா? என்ற பயம் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய குடும்ப பெண்களிடம் இருந்து வந்தது. அதேபோல் வருகின்ற ஏழாம் தேதி டாஸ்மார்க் ஓபன் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழ்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ இதற்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காகவும், மது பிரியர்கள் மது கிடைக்காமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் அவதியை குறைப்பதற்காகவும் டாஸ்மாக் ஓபன் செய்யப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். அவரது விளக்கம் விசித்திரமாக இருப்பதாக சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |