Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதனால கட்ட முடியல… சோதனையில் தெரியவந்த உண்மை… அதிகாரிகளின் சரமாரியான கேள்வி…!!

டாஸ்மாக் கடையில் சோதனை செய்தபோது 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களின் இருப்பு குறைவாக காணப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பால்பாண்டியன் பேட்டையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் இருக்கும் மதுபாட்டில்களை ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி ஊழியர்கள் விற்பனை செய்ததாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி தாசில்தார் மல்லிகா மற்றும் வருவாய் துறையினர் அந்த டாஸ்மாக் கடையில் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 1 லட்சத்து 16 ஆயிரத்து 830 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் காணாமல் போனது அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கடை ஊழியர்களான கோபால்சாமி, அருணாச்சலம், கணேசன், கதிர்வேல் போன்றோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர் அந்த விசாரணையில் முழு ஊரடங்கு அறிவிப்பிற்கு முன்பு மாலை 5 மணி முதல் 6 மணி வரை மது விற்பனை செய்யப்பட்ட பணத்தை வங்கியில் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக ஊழியர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அறிக்கையை அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மண்டல மேலாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |