Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பணம் தர முடியாது” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டாஸ்மாக் பார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயபிரகாஷ் கடந்த வாரம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என அவரது தந்தை சௌந்தரராஜனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு சௌந்தரராஜன் இப்போது பணம் தர முடியாது என மறுத்து கூறியுள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயபிரகாஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயபிரகாஷ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவருடன் தங்கியிருந்த பிரசாத் என்பவர் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது ஜெயபிரகாஷ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரசாத் இதுகுறித்து பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெயபிரகாஷின் உடலை உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |