அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு, டாஸ்மார்க் பார்கள், உரிமம் பெற்ற சிறப்பு பார்கள் என அனைத்தும் இரண்டு நாட்கள் கண்டிப்பாக மூடவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
Categories