மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரிடம் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் டாஸ்மார்க் கடை ஒன்றில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். சுரேஷ் டாஸ்மார்க் கடையில் வசூலான 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அவர் சென்று கொண்டிருந்த வழியில் 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அதன்பின் அவர்கள் சுரேஷை கடுமையாக தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது. மர்ம கும்பல் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.