புத்தாண்டு தினமான நேற்று மது கடைகளில் விற்பனையானது ரூபாய் நாலரை கோடியை எட்டியுள்ளது.
தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையானது அமோகமாக இருக்கும். இதற்காக பண்டிகை காலங்களில் மதுபானங்கள் இருப்பில் வைக்கப்பட்டு தட்டுப்பாடின்றி அதிகளவில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஒரு சில நாட்களுக்கு முன்னரே ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் அதிகளவு மதுபானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதனையடுத்து புத்தாண்டு தினத்தன்று மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுபானங்களை டாஸ்மாக் கடைகளிலிருந்து வாங்கி சென்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் 144 சில்லரை டாஸ்மாக் மதுபான கடைகளும், பத்துக்கும் மேற்பட்ட பார்களும் இயங்கி வருகின்றன. எனவே ஒவ்வொரு கடைகளிலும் மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் ஒரே நாளில் மதுவானது ரூபாய் 4 கோடியே 44 லட்சத்து 98 ஆயிரத்து 80 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.