டாஸ்மார்க் திறக்காத மாவட்டங்களில் மது கடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக சில மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வந்தது. இதையடுத்து தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் டாஸ்மாக் திறக்காத மாவட்டங்களில், பக்கத்து மாவட்டங்களிலிருந்து மது கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் திறக்காத மாவட்டங்களில் மது கடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பக்கத்து மாநிலங்களிலிருந்து மது கடத்தி வருபவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுமா? அதே நடவடிக்கை மாவட்டங்களுக்கு இடையில் மது கடத்தினாலும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.