Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த விற்பனையாளர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

டாஸ்மாக் விற்பனையாளரிடம் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வள்ளியூர்-ஏர்வாடி மெயின் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கரலிங்கம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நம்பியான்விளை பைபாஸ் ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது அவரின் பின்னால் வேகமாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வழிமறித்தனர். அதன்பின் சங்கரலிங்கத்தை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் கையில் வைத்திருந்த பையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து சங்கரலிங்கம் வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |