Categories
மதுரை மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடை உடைப்பு…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பூட்டி இருந்த டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை மர்ம நபர் திருடி சென்றுள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை ஊழியர்கள் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் கடையை ஊழியர்கள் திறக்க வந்த போது கடையின் பூட்டு மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்ததில் கடையில் வைக்கப்பட்டிருந்த 110 மதுபாட்டில்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுபற்றி கடை சூப்பர்வைசர் நீதிமாறன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதுபாட்டில்களை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |