Categories
சென்னை சேலம் திருச்சி மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.1,71,00,00,000 பணத்தை கொட்டிய டாஸ்மாக்…. மாஸ் காட்டிய விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்று டாஸ்மாக் மூலம் சென்னை மண்டலத்தில் 20 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. அதேபோல் திருச்சி மண்டலத்தில் 38 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 37 கோடி ரூபாய்க்கும், கோவையில் 34 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி இருக்கிறது.

மொத்தம் 171 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. வார இறுதி நாட்களில் சுமார் 120 கோடி முதல் 140 கோடி வரை மது விற்பனையாகும். அதைத்தாண்டி 30 கோடி ரூபாய் அதிகமாக மது விற்பனையாகி இருக்கிறது. இன்று முழு ஊரடங்கும் காரணமாக டாஸ்மார்க் கடைகள் விடுமுறை என்பதால், மது பிரியர்கள் நேற்றை கடைகளுக்குச் சென்று மது வாங்கியதன் அடிப்படையில் முப்பது கோடி ரூபாய் அதிகமாகி 170 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் மது விற்பனையாகி உள்ளது.

Categories

Tech |