தேவையான பொருட்கள்:
துருவிய ஆப்பிள் 3,
பாதாம் அரை கப்,
நெய் 200 கிராம்,
சர்க்கரை அரை கிலோ,
ஏலக்காய்-2,
லவங்கம் 2,
பால்பவுடர் முக்கால் கப்.
செய்முறை: பாதாமை தண்ணீரில் ஊறவைத்து தோலை உரித்து மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் துருவிய ஆப்பிள் உடன் நெய்யும் , சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் லவங்கம் , ஏலக்காய் , பாதாம் விழுது சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கிளறிக் கொள்ளவும். இதில் பால் பவுடரை இதமான சூட்டில் கிளறிக் இறக்கினால் சுவையான ஆப்பிள் பாதாம் அல்வா தயார்