Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மொச்சை கொட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்”… இதுல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கு… கட்டாய சாப்பிடுங்க..!!

கிராமங்களில் இருக்கும் பெரியவர்கள் மட்டும்தான் சீசனுக்கு கிடைக்கும் உணவுப் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்துவார்கள்.

மொச்சை தானே என்று சாதாரணமாக இருக்காதீர்கள். அதில் பல சத்துக்கள் உள்ளது.  புரதம் நிறைந்த வை. மொச்சைக்காய் அப்படியே உலர வைத்து அதன் பருப்பை பயன்படுத்தி வரலாம். தை மாதங்களில் பொங்கல் படையலில் மொச்சைக்காய் கண்டிப்பாக இடம்பெறும். மொச்சை குழம்பு,  மொச்சை பொரியல், கூட்டு என்று பல உணவுகள் உள்ளது. இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.

பல நோய்களுக்கு மருந்து 

நீரழிவு நோயை குணப்படுத்த இது பயன்படுகின்றது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், வயிற்றில் இருக்கும் நீரை உறிஞ்சி ஜெல்லாக உருவாக செய்கிறது, இதனால் ரத்த சர்க்கரை குறைந்து, நீரிழிவு மற்றும் இன்சுலின் பிரச்சனை இருப்பவர்கள் மொச்சையை நன்றாக சாப்பிடலாம்.

இதில் அதிக அளவு கலோரிகள் உள்ளது. நார்ச்சத்து நிறைந்தது. உடலுக்கு போதுமான ஆக்ஸிஜனேற்றத்தை  தருவதால் ரத்த நாளங்களை சீராக்கி இரத்தத்தில் உள்ள அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு குறைகிறது.

இது புரத சத்து அதிகம் நிறைந்தது. இதில்  கலோரிகள் குறைவாகவும், கொழுப்பு இல்லாமலும் இருப்பதால் உடல் செயல்பாட்டை சீராக செய்கின்றது. செரிமானத்தை மேம்படுத்த மொச்சை பயன்படுகிறது.

உடலில் நோய் அல்லது காயம் ஏற்பட்டால் வேகமாக குணப்படுத்தவும் உடனே சரி செய்யவும் இவை உதவக்கூடும். இரும்புச்சத்து குறைபாட்டால் வரக்கூடிய இரத்த சோகையை தவிர்க்கும். இரத்த சோகையால் வரக்கூடிய பலவீனம், குமட்டல், சோர்வு தலைவலி போன்றவற்றை தவிர்க்க செய்யும்.

எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இந்த மொச்சை எடுத்துக்கொண்டால் எலும்பு வளர்ச்சி அடையும். இதில் உள்ள மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

இது சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதால் சருமத்தின் ஆரோக்கியம் காக்கிறது. நம் சருமத்தை ஆரோக்கியமாகவும், இயற்கையாகாவும் ஒளிர வைக்க செய்கிறது. இது சரும செல் சேதம். நோய் மற்றும் பிற உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்க செய்கிறது.

மொச்சையை நன்மை செய்யக் கூடியவை தான். ஆனால் சிறுநீரக கற்கள் மற்றும் கீழ் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சாப்பிட கூடாது. இதில் உள்ள யூரின் ஆனது உடலில் யூரிக் அமிலமாக உருவாகிறது.

Categories

Tech |