Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவை ”அரும்புகளை தூண்டும்” மினி மசாலா இட்லி..!!

தேவையான பொருட்கள்:

இட்லிமாவு  –   நாலு கப்

பெரிய வெங்காயம்  –  2

தக்காளி  –  3

மிளகாய்த்தூள்  –  2 டீஸ்பூன்

எண்ணெய்  –  1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது  –   ஒரு ஸ்பூன்

கடுகு  –  அரை ஸ்பூன்

சோம்பு  –  அரை ஸ்பூன்

உளுந்து  –  அரை ஸ்பூன்

உப்பு  –  தேவையான அளவு

கறிவேப்பிலை  –  தேவையான அளவு

மல்லித்தழை  –  தேவையான அளவு

செய்முறை:

மாவை சின்ன சின்ன இட்லிகளாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் .பெரிய இட்லிகளாக செய்து அதை நன்றாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெலிதாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் வைத்து  கடுகு, சோம்பு, உளுந்து இவற்றை தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .இதில் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இட்லியை புரட்டி மல்லித்தழை தூவிப் பரப்பவும். சுவையான மற்றும் சுவை அரும்புகளை தூண்டும் மசாலா இட்லி தயார்.

Categories

Tech |