வெனிலா ஐஸ்க்ரீம்
தேவையான பொருட்கள்:
பால் – 2 கப்
க்ரீம் – 2 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரையுடன் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்றாக அடித்து எடுத்து கொள்ள வேண்டும். பின் இதனுடன் வெண்ணிலா எசென்ஸ் மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்கி ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பின்பு அதனை எடுத்து ஸ்பூனால் நன்கு கிளறி மறுபடியும் 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்து பரிமாறினால் டேஸ்டான வெனிலா ஐஸ்க்ரீம் தயார் !!!