Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் வெற்றியை ருசிக்குமா ? லாரா அணி….. சவுத் ஆப்பிரிகாவுடன் இன்று மோதல் …!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக T20 கிரிக்கெட் தொடரில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி சவுத் ஆப்ரிக்கா அணியை எதிர்கொள்கின்றது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக T20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ஆம் தேதி முதல் மும்பையில் நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் என ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. நேற்று நடந்த 3ஆவது போட்டியில் ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணியை வீழ்த்தி இந்திய லெஜெண்ட் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 4ஆவது போட்டியில் பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி ஜான்டி ரோட்ஸ் தலைமையிலான சவுத்ஆப்ரிக்கா லெஜெண்ட் அணியை எதிர்கொள்கின்றது. மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய் பாட்டீல் விளையாட்டு அகாடமி மைதானத்தில் 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் போராடும்.

வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி இந்திய லெஜெண்ட் அணியுடன் மோதிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு இருக்கின்றது. அந்த அணியின் சந்திரபால் , கங்கா கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த போட்டியிலும் தங்களின் மிரட்டலான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணியை மிரட்டுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அதே போல தென்னாப்பிரிக்கா லெஜெண்ட் அணியும் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க நினைக்கும் என்பதால் ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் : பிரையன் லாரா (கேப்டன்), யோஹன் பிளேக், ஷிவ்நாரைன் சந்தர்பால், ராம்நரேஷ் சர்வன், ஆடம் சான்ஃபோர்ட், கார்ல் ஹூப்பர், டான்ஸா ஹயாட், டேரன் கங்கா, பருத்தித்துறை காலின்ஸ், ரிக்கார்டோ பவல், ரிட்லி ஜேக்கப்ஸ், சாமுவேல் பத்ரி, சுலைமான் பென்.

தென்னாப்பிரிக்கா லெஜெண்ட் : ஜான்டி ரோட்ஸ் (கேப்டன்), ஆண்ட்ரூ ஜேம்ஸ், ஆண்ட்ரூ ஹால், கார்னெட் க்ரூகர், ஜே ருடால்ப், ஆல்பி மோர்கல், ஜே.ஜே. வான் டெர் வாத், நீல் ரோட்ஸ், லான்ஸ் க்ளூசனர், மார்ட்டின் ஜார்ஸ்வெல்ட், மோர்ன் வான் வைக், பால் ஹாரிஸ், ரியான் மெக்லாரன்.

Categories

Tech |