Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தித்திக்கும்.. சுவையுடைய.. அறுகம்புல் லட்டு..!!

தேவையான பொருட்கள் :

அருகம்புல் – 2 கப்

வெள்ளம்  –  200 கிராம்
ராகி அவல்   –  200 கிராம்
தேங்காய் துருவல்   –  2 கப்
பொட்டுக்கடலை – 100 கிராம்
சுக்கு தூள்   –   சிறிதளவு

ஏலக்காய்த்தூள்  –   சிறிதளவு

செய்முறை:

முதலில் அருகம்புல்லை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்து  கொள்ளவும்.

பின் கேப்பை அவலை நன்றாக கழுவி 4  நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் வெல்லத்தை மிக்ஸியில் தூலாக்கி  கொள்ள வேண்டும்.கேப்பை அவலில் உள்ள தண்ணீரை நன்றாக வடித்து விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்வும்.

அதன் பின் பொடியாக நறுக்கிய அருகம்புல்லை தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸியில் விழுதாக எடுத்துக் கொள்ள வேண்வும் .பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த அவல், விழுதாக அரைத்த அருகம்புல்,  வெள்ளம், தேங்காய் துருவல், பொட்டுகடலை, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள்,  இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து லட்டாக பிடித்தால் சத்து நிறைந்த அருகம்புல் லட்டு தயார்.

Categories

Tech |