Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான காலிஃப்ளவர் கோலா உருண்டை ரெசிபி!

தேவையான பொருட்கள் :

துருவிய காலிஃப்ளவர் – 1/2 கப்,
துருவிய பனீர் – 1/2 கப்,
சோள மாவு – 1 ள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – 2 கப்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,
நட்ஸ் கலவை – 2 ஸ்பூன்.
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
முந்திரி – 4,
இஞ்சிபூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,
பால்/கிரீம் – 1/2 கப்,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்.
ஜாமூன் மிக்ஸ் – 1 கப்,
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை,

செய்முறை :

துருவிய காலிஃப்ளவர், பனீர், சோளமாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம்மசாலா, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். ஜாமூன் மிக்ஸ், உப்பு, பேக்கிங் சோடா, தண்ணீர் அல்லது பால் சேர்த்து மாவாக பிசைந்து 5-10 நிமிடம் ஊற வைக்கவும்.

பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு எடுத்து, உள்ளே கலந்து வைத்துள்ள காலிஃப்ளவர் கலவை, நட்ஸ் பருப்புகளை பூரணமாக வைத்து மாவை மூடி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, முந்திரி, இஞ்சிபூண்டு விழுது, மசாலா சேர்த்து வதக்கி, விழுதாக அரைக்கவும். சீரகம் தாளித்து, அரைத்த விழுது சேர்த்து பச்சைவாசனை போகும்படி கொதிக்க விடவும். பால்/கிரீம், கரம் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி கோஃப்தா உருண்டை சேர்த்து கலக்கி சாப்பாடு உடன் பரிமாறவும்.

Categories

Tech |