பைனாப்பிள் கேசரி
தேவையான பொருட்கள் :
அன்னாசிப் பழம் – 1 கப்
ரவை – 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1/4 கப்
அன்னாசி எசன்ஸ் – 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 10
ஃபுட் கலர் (மஞ்சள்) – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 தேவையான அளவு
செய்முறை:
முதலில் அன்னாசிப்பழத்துடன் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் நெய் சேர்த்து ரவையை வறுத்தெடுக்க வேண்டும் . பின்னர் ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெயை காய வைத்து முந்திரிப்பருப்பைப் போட்டு 3 கப் தண்ணீர் , மஞ்சள் கலர் சேர்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையை கொட்டி கிளறி , ரவை வெந்ததும் அன்னாசி, சர்க்கரை கலவையையும் கொட்டி கிளற வேண்டும் .பின் எசன்ஸ் சேர்த்து பரிமாறினால் சுவையான பைனாப்பிள் கேசரி தயார் !!!