போஹா
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
பால் – 3/4 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
எண்ணெய் – 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் சேர்த்துக் கிளறி பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான தீயில் , சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான போஹா ரெசிபி தயார் !!!