Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வெஜிடபிள்ஸ் நூடுல்ஸ் கட்லெட்!

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் – 200 கிராம்,
வேகவைத்த கலந்த காய்கறிகள் – 1/2 கப்,
உருளைக்கிழங்கு – 3,
பச்சை மிளகாய் – 2,
பெரிய வெங்காயம் – 2,
பூண்டு – 2,
கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தக்காளி சாஸ்,
பொரிக்க எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்த நன்றாக மசித்து கொள்ளவும். மைதா மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கேரட், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, கேரட், இஞ்சி, மேகி நூடுல்ஸ் மசாலா, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள், செஷ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

நொறுக்கிய நூடுல்ஸை ஒரு தட்டில் கொட்டிக்கொள்ளவும். கலந்த கலவையை விருப்பமான வடிவில் பிடித்து மைதா மாவில் முக்கி நொறுக்கி வைத்துள்ள நூடுல்ஸில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும். சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் ரெடி.

Categories

Tech |