கொரோனா தடுப்பு நிவாரணமாக டாடா குழுமம் 1500 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. 800க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் நாட்டின் பெரிய தொழில்துறை நிறுவனமான டாடா குழுமம் சார்பில் 1,500 கோடி வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. டாட்டா அறக்கட்டளை சார்பில் 500 கோடியும், டாடா சன்ஸ் குழுமம் சார்பில் 1000 கோடி ரூபாய்க்கும் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்டுட்டுள்ளது.
The COVID 19 crisis is one of the toughest challenges we will face as a race. The Tata Trusts and the Tata group companies have in the past risen to the needs of the nation. At this moment, the need of the hour is greater than any other time. pic.twitter.com/y6jzHxUafM
— Ratan N. Tata (@RNTata2000) March 28, 2020
Account : PM CARES, Ac No 2121PM20202, IFSC: SBIN0000691 -இல் நிதியுதவி அளிக்கலாம். SWIFT Code : SBININBB104 – இல் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நிதியுதவி வழங்கலாம். Name of Bank&Branch : State Bank of India, New Delhi Branch, UPI ID: pmcares@sbi – இதில் பொதுமக்கள் வழங்கும் சிறிய அளவிலான நிதியும் ஏற்றுக் கொள்ளப்படும். பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவிகள் உதவும் என்று மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.