இந்தியாவில் விற்பனையை மீட்டெடுக்க டாடா மோட்டார்ஸ் தங்களது கார்களுக்கு ரூபாய் 80,000 வரை சிறப்பு தள்ளுபடி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில், நிலுவையில் இருக்கும் ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டன. உதாரணத்திற்கு கார் தொழிற்சாலைகள் ஏதும் இயங்காது என்பதாலும், மக்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் கார் விற்பனையானது சரிய தொடங்கியது.
தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து கார்கள் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. சரிவில் இருக்கும் விற்பனையை சரிசெய்து மீட்டெடுக்க டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, அந்நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஹேரியார், நெக்ஸான், டைகார், டியாகோ உள்ளிட்ட கார்களுக்கு ரூபாய் 80 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளது.