டாடா நிறுவனம் புதியதாக ஹாரியர் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது .
டாடா நிறுவனம் அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட ஹாரியர் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரானது விசேஷமாக கருப்பு வண்ணத் தேர்வில் டார்க் எடிசன் என்ற பெயரில் ஆறிமுகமாகியுள்ளது. இந்த ஹாரியர் டார்க் காரின் விலை ரூ.16.76 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடலில் பளபளப்பு மிகுந்த கிளாஸி பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது விற்பனைக்கு வந்துள்ள மாடலில் பழுப்பு வண்ண இன்டீரியர் தீம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டார்க் எடிசனில் கருப்பு வண்ண லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும், மர அலங்கார வேலைப்பாடுகளுடன் மிகவும் பிரிமீயமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், டாப் வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பிரத்யேக கருப்பு வண்ணத்தை தவிர்த்து, வேறு எந்த மாற்றங்களும் வழங்கப்படவில்லை.
இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் கொடுக்கிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட உள்ளது. அந்நிலையில், இந்த எஞ்சின் 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றதாக இருக்கும். மேலும், இந்த கார் காலிஸ்ட்டோ காப்பர், தெர்மிஸ்ட்டோ கோல்டு, ஏரியல் சில்வர், டெலிஸ்டோ க்ரே, ஆர்கஸ் ஒயிட் மற்றும் இரட்டை வண்ண நிறங்களில் கிடைக்கிறது.