டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகம் செய்ய உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் விற்பனை செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த மாடலின் டீசரையும் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய காருக்கு நெக்ஸான் க்ராஸ் என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. மேலும், இந்த காரைக் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. மேலும், நெக்ஸான் எஸ்.யூ.வியின் க்ரில், சைடு மிரர்கள் விசேஷ பூச்சுடனும், உட்புறத்தில் சிறப்பு அலங்காரங்களும், அலாய் வீல்களுடனும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம், புளூடூத் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் ஏசி வென்ட்டுகள் போன்றவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நெக்ஸான் எஸ்.யூ.வியில் க்ராஸ் மற்றும் க்ராஸ் ப்ளஸ் ஆகிய இரண்டு மாடல்களில் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டுகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும்.
எஞ்சின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த காரில் 110 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனை வழங்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆரெஞ்சு நிற கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடி மற்றும் வீல் கேப்களும், காரின் உள்ளே ஏர் வெண்ட், டோர் பேனல்கள் அனைத்தும் ஆரெஞ்சு நிறத்துடன் இருக்கலாம். இந்த டாடா நெக்ஸான் க்ராஸ் கார் சாதாரண வேரியண்ட்டுகளை விட கூடுதல் விலையிலும், அதிக சிறப்பம்சங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.