1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜேனடா விமான நிலையத்திற்கு John Zegrus என்ற ஒருவர் வந்துள்ளார். அங்கிருந்த போலீசார் அவரை சந்தேகித்து, அவரின் பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்துள்ளனர். அதனைக் கண்டு அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போயினர். காரணம் என்னவென்றால் அவரது பாஸ்போர்ட்டில் அவர் Taurad என்ற நாட்டில் இருந்து வருவதாக போட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அதற்கு முன்பே அவர் இரண்டு முறை தொழில் முறைப் பயணமாக ஜப்பான் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் Taurad என்ற ஒரு நாடு இல்லவே இல்லை. அதனால் குழப்பம் அடைந்த அதிகாரிகள் உலக வரைபடத்தை காட்டி, அதில் உன் நாடு எங்கு உள்ளது என்று கேட்டுள்ளனர். அவர் அந்த வரைபடத்தில் காட்டிய இடம் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் பார்டரில் உள்ள Andorra. மேலும் குழம்பிப்போன அதிகாரிகள் அவர் கொண்டுவந்த அனைத்தையும் தீவிரமாக சோதனையிட்டு, விமான நிலையம் அருகில் இருந்த ஒரு ஹோட்டலில் அவரை கைது செய்து வைத்திருந்தனர். பாதுகாப்பிற்கு அந்த அறைக்கு வெளியே இரண்டு காவலாளிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கு ஒரே ஒரு வழி தான் இருந்துள்ளது. ஆனால் சற்று நேரத்தில் அவர் அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டார். அனைவரும் திகைத்துப் போயினர். ஆனால் அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒரு நாட்டில் ரகசிய உளவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.