ரிஷபம் ராசி அன்பர்கள்…!! இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். திடீர் செலவு ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும் சக பணியாளர்கள் பணியில் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் பன்மடங்காக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினரிடம் அன்பாகவும் நடந்து கொள்வீர்கள்.
இன்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த தனவரவு வந்து சேரும். கடன்கள் அடைபடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செல்வாக்கு கூடும். அதுமட்டுமில்லாமல் இன்று மேற்கொள்ளும் வெளியூர் பயணம் சிறப்பு கொடுப்பதாகவே அமையும். வாகனத்தில் பயணிக்கும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போதும் கவனத்துடன் ஈடுபடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை