எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்கள் மனதில் பதட்டம் கொஞ்சம் ஏற்படக்கூடும். இன்று நண்பரின் ஆலோசனைகள் நன்மை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. அதிக உழைப்பால் பணவரவு சீராகும். கண்களை பாதுகாப்பதில் தகுந்த கவனம் வேண்டும். இன்று எதிலும் முழு முயற்சியில் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் திருப்தி அடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளையோ காரியங்களையோ செய்யும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து விஷயமும் சிறப்பாகவே இருக்கும். வெற்றி வாய்ப்புக்கள் உங்களுடைய இல்லம் தேடி வரக்கூடும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்