Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “வரவும் செலவும் சரியாக இருக்கும்”… எந்த காரியத்திலும் அவசரம் வேண்டாம்.!!

செய்யும் வேலையை மிகவும் சிறப்பாக செய்யக்கூடிய ரிஷபராசி அன்பர்களே..!! இன்று பகைவரால் உருவான தொந்தரவு விலகிச்செல்லும். தொழில் வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணிபுரிவீர்கள். வளர்ச்சியும் பணவரவும் இன்றைக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். புத்திரர் வெகுநாள் விரும்பி கேட்ட  பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பல வகையிலும் உங்களுக்கு நன்மை ஏற்படும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் சாதகமான போக்கு இருக்கும். கடினமான வேலைகளை கூட சுலபமாக இன்று முடிப்பீர்கள்.

வரவும் செலவும் சரியாக இருக்கும். இன்று நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எந்த காரியத்திலும் அவசரம் மட்டும் காட்ட வேண்டாம். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். அக்கம்பக்கத்தினருடன் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ சிவப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். இன்று தீபாவளி தினம் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், கஷ்டங்களையும், துன்பங்களையும் தூக்கிப்போட்டுவிட்டு மன நிம்மதியாக தீபாவளியை  மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |