Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “இன்று திடீரென்று கோபம் வரக் கூடும்”… பிரச்சினை முடிவுக்கு வரும்..!!

எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க கூடிய திறமையை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பூமி வாங்கும் யோகம் ஏற்படும். ஊர்மாற்றம், இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை உருவாகும். அருகில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பகை மட்டும் நட்பாக கூடும். இன்று திடீரென்று கோபம் வரக் கூடும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சை கேட்க நேரலாம். கவனம் இருக்கட்டும். மற்றவர் செய்கையால் மனவருத்தம் கொஞ்சம் ஏற்படும். நீண்ட நாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆர்டர்கள் உங்கள் கைக்கு வந்து சேரும்.

வியாபாரப் போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறக்கூடும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |