மனதை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும் ரிஷபராசி அன்பர்களே..!! இன்று மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படக்கூடும். உங்களுடைய மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரம் சுமாராக தான் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். புத்திரரின் நல்ல செயல் பெற்றோருக்கு பெருமை தேடிக் கொடுக்கும். இன்று பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு நல்லபடியாக கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கும். தூரதேச பிரயாணங்கள் செல்லவேண்டியிருக்கும். சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும்.
ஆரோக்கிய குறைபாடு மட்டும் இருக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். முக்கியமாக வயிற்று சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கும். அதை கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். அது போதும் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்