Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் இராசிக்கு… “இன்று நிதி நிலை உயரும் நாள்”… எதிர்பார்த்த லாபம் வரும்.!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று நிதி நிலை உயரும் நாளாக இருக்கும். புதிய வேலைக்கான வாய்ப்பு உருவாகும். அரசு வேலைக்கான அழைப்பு கூட வரலாம். இன்று மனைவி மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டமான வாய்ப்புகளும் மகிழ்ச்சியான சம்பவங்களும் நடக்கும். இன்று சுகபோக வாழ்கை அமையும். தன லாபம் சிறப்பாக இருக்கும். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டவர்கள் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடி வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். கணவன் மனைவிக்குள் அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினரிடம் மட்டும் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். அது போதும்.

வீண் வாக்குவாதங்கள் யாரிடமும் செய்ய வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி பெறக் கூடிய சூழலும் இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |