Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “சுய லாபம் பெற உங்களை அணுகுவார்கள்”… துணிச்சலுடன் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! சிலர் சுய லாபம் பெற உங்களை அணுக கூடும் பார்த்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவது புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும்.

கணவன் மனைவிக்கு இடையே நீடித்து வந்த மன வருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கலகலப்பும் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சக மாணவர்களுடன் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகனை மனதார நினைத்து வழிபடுங்கள். அனைத்து காரியங்களும் வெற்றியை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |