ரிஷபம் ராசி அன்பர்களே..!! நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற குடும்பத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலக பணிகளை முடிப்பதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிலும் அவசரப்படாமல் புத்தி கூர்மையுடன் செயல்படுங்கள்.
அது போதும். எதிர்ப்புகள் விலகி செல்லும். இன்று காரியத்தில் இருந்த தடைகளும் விலகி செல்லும். இன்று அக்கம் பக்கத்தினர் உங்களை அன்பு பாராட்டக் கூடும். இன்றைய நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்