ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று மற்றவர்களுக்கு உதவி புரிவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் மட்டும் செயல்படுங்கள். செல்வம் சேரும் சூழ்நிலையும் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன விஷயங்களுக்கு கூட அதிக உணர்ச்சி வசப்படாமல் பேசுவது நல்லது. பொறுமையைக் கையாளுங்கள் அது போதும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். இன்று வரவு ் இருந்தாலும் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வீண் அலைச்சலும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
கவனமாக செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். இருந்தாலும் வாகனத்தில் செல்லும்போது மட்டும் பொறுமையை கையாளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ, முக்கியமான இடத்திற்கு செல்லும் பொழுதோ நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெற்றிகள் குவியும். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து கொள்ளுங்கள் அது போதும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குருமார்களின் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். அதாவது சித்தர்களை வழிபட்டால் நன்மையான பலன்களை நீங்கள் அடையக்கூடும். சித்தர்கள் வழிபாடு உங்கள் வாழ்க்கையை மென்மேலும் உயர்த்தும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்