Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “நீங்கள் நினைத்தது நடக்கும்”… எதிரிகள் விலகிச் செல்வார்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு உதவி உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உங்களுடைய புத்திரரின் நல்ல செயல் பெருமையை தேடிக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கெட்டிக்காரர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும் படியான சூழல் உருவாகும். மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். நீங்கள் நினைத்தது இன்று நல்லபடியாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். அது போலவே உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

பழைய கடன்கள் அடைபடும். அதேபோல் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய ஆசிரியர்களின் சொல்படி மட்டும் தயவு செய்து நடந்துகொள்ளுங்கள். கணவரிடம் ஒற்றுமை பேணுவது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணிக்கு செல்லும் பொழுது முக்கியமான காரியத்தில் ஈடுபடும்போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டுல்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்தால் உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |