ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று செல்வாக்கு உங்களுக்கு உயரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல நீங்கள் தொழிலுக்காக எடுக்க கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ரொம்ப நல்ல படியாக இருக்கும். பழைய சிக்கல்கள் அனைத்தும் தீரும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் தாமாகவே விலகிச் சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையும் நல்லபடியாக இருக்கும். வீண் செலவு குறையும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்துசேரும்.
உங்களுடைய சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் இருந்த சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களின் வேலைப் பளு அதிகரிக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். உழைப்பு கடுமையாக இருந்தாலும் லாபத்துக்கு எந்தவித குறையும் இருக்காது. அதுபோல உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும்.இன்று இல்லத்தில் மகிழ்ச்சியான சூழலில் இருக்கும். பெண்களுக்கு மன குழப்பம் தீரும் நாளாக இருக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்பு கிடைக்கும். அது போலவே இன்று அதிர்ஷ்டமான வாய்ப்புகளையும் நீங்கள் பெறக்கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் பற்றிய பேச்சு வார்த்தை நடத்தினால் இன்று சிறப்பை கொடுக்கும்.
இன்றைய நாள் வெளிவட்டாரத்தில் நீங்கள் மதிக்கப்படும் நாளாக இருக்கும்.போது அதுபோலவே இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமிட்டு வாருங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ஒரு மனிதனுக்கு கர்ம தோஷம் மட்டும் பின்தொடரும் ஆயின் அது நல்லதாக இருந்தால் நல்லது நடக்கும். தீமையாக இருந்தால் நமக்கு தீமை நடக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த தோஷத்தை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்