ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உருவாகும். தொழில் வியாபாரம் செழித்து சமூகத்தில் புகழ் பெறுவீர்கள். பணவரவும் நன்மையை கொடுக்கும். வாழ்க்கை தரம் உயரும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு இன்று அனைத்து விஷயங்களுமே சிறப்பை கொடுக்கும். அதே போல மனம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் படிக்க வேண்டி இருக்கும். பொறுப்புக்கள் அதிகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். கவனமாக படியுங்கள் அது போதும். எதிலும் எச்சரிக்கையாக இருங்கள். அது போல வியாபாரத்திலிருந்த காரிய தடை விலகி செல்லும். எப்பொழுதுமே நண்பரிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக பேசுங்கள். உங்களுடன் பணிபுரிவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்களின் ஆர்வமும் அக்கறையும் மற்றவரை பிரமிப்படைய செய்யும். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய திறமையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட கூடும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். வாகன யோகம் இன்றைக்கு இருக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு இன்று அதிர்ஷ்டகரமான நிறமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் இன்று விநாயகர் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்